திருநெல்வேலி
மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர்களுக்கு அபராதம்
|திசையன்விளையில் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட வாலிபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திசையன்விளை:
திசையன்விளை பைபாஸ் ரோடு, மன்னார்புரம்-இட்டமொழி ரோடுகளில் பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் மோட்டார் சைக்கிள் சைலன்சர்ரை கழற்றிவிட்டு இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபடுவதாக திசையன்விளை போலீசுக்கு புகார் வந்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டதாக திசையன்விளை நவ்வலடி ரோடு இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் சிவா (வயது 20), ஆயன்குளம் பீர்முகமது மகன் சேக் முகமது (20) மற்றும் 17 வயது நிரம்பிய 2 சிறுவர்கள் என 4 பேரை போலீசார் மடக்கிபிடித்து அழைத்து வந்து விசாரித்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து போலீசார், ரூ.27 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர். அவர்களின் பெற்றோர்களை அழைத்து அவர்களிடம் எழுதி வாங்கினர். மேலும் வாலிபர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.