< Back
மாநில செய்திகள்
மெரீனா கடற்கரை:  பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
சென்னை
மாநில செய்திகள்

மெரீனா கடற்கரை: பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

தினத்தந்தி
|
8 Aug 2022 10:35 PM IST

மெரீனா கடற்கரையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.15,700 அபராதம் வசூலிக்கப்பட்டது.

சென்னை:

சென்னையில் மெரினா, பெசன்ட்நகர், திருவான்மியூர் கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக மாற்றிட ஆகஸ்டு 5-ந்தேதி முதல் தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து பெருகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது.

சென்னையில் உள்ள கடற்கரை பகுதிகளை பிளாஸ்டிக் இல்லா கடற்கரை பகுதிகளாக பராமரிக்கும் வகையில் சுகாதார அலுவலர்கள் தலைமையில் காலை மாலை என இருவேளைகளில் ஆய்வு மேற்கொண்டு. பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் மெரீனா கடற்கரையில் ஆகஸ்டு 5-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் 61 கடை உரிமையாளர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட 71 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ15,700 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி இன்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிளாஸ்டிக் தடுப்பு மற்றும் தூய்மைப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது துணை மேயர் மகேஷ் குமார், அடையாறு மண்டல குழு தலைவர் துரைராஜ் உள்படபலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்