< Back
மாநில செய்திகள்
ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டினால் பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு தண்டனை
சென்னை
மாநில செய்திகள்

ஓட்டுனர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டினால் பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு தண்டனை

தினத்தந்தி
|
17 Aug 2023 7:06 AM IST

சென்னை,

சென்னை வேப்பேரி போக்குவரத்து போலீசார் சார்பில், நேற்று புரசைவாக்கம் அண்ணாமலை சாலையில் உள்ள எம்.சி.டி.எம். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதாவது, பள்ளிக்கு வரும்போதும், பள்ளி முடிந்து போகும்போதும் பஸ்சில் படிக்கட்டில் பயணம் செய்யக் கூடாது, பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது, பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு சிரமத்தை ஏற்படுத்தக்கூடாது என்று அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும், நாம் படிக்கும் பள்ளிக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும், பெற்ற தாய். தந்தையருக்கும் நற்பெயர் வாங்கிக் கொடுக்க வேண்டும், ஒழுக்கத்துடன் கல்வி பயில வேண்டும், பள்ளி மாணவர்கள் ஆகிய தாங்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் வாகனத்தை கொடுத்த பெற்றோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும், அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மீண்டும் படிக்கட்டில் பயணம் செய்தால் உங்களது விவரங்கள் சேகரிக்கப்பட்டு பள்ளி நிர்வாகத்துக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.

மேலும் செய்திகள்