< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கடமையை செய்யாத காவலருக்கு அபராதம் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
|28 July 2023 8:28 AM IST
உத்தரவை உரிய காலத்தில் நிறைவேற்றாத ஆய்வாளருக்கு அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
திருடுபோன வாகனத்தை கண்டுபிடிப்பது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உரிய காலத்தில் நிறைவேற்றாத சென்னை திருமங்கலம் காவல்நிலைய ஆய்வாளருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021-ல் இருசக்கரவாகனத்தை காணவில்லை என திருமங்கலம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், வழக்கு பதியக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வாகனத்தை திருடியவர்களை கைது செய்ய வேண்டும், காப்பீடுத் தொகை கிடைக்க ஏதுவாக "வாகனத்தை கண்டுபிடிக்க முடியவில்லை" என சான்றிதழ் வழங்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, கடந்த ஆண்டு பிப்ரவரியில் 4 வார கால அவகாசம் வழங்கினார்.
ஆனால் அந்த உத்தரவை உரிய காலத்தில் ஆய்வாளர் நிறைவேற்றாததால், கடமையை செய்ய தவறியதாக அவருக்கு கோர்ட்டு அபராதம் விதித்துள்ளது.