< Back
மாநில செய்திகள்
கெட்டுப்போன உணவுப்பொருள் வைத்திருந்த வியாபாரிகளுக்கு அபராதம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கெட்டுப்போன உணவுப்பொருள் வைத்திருந்த வியாபாரிகளுக்கு அபராதம்

தினத்தந்தி
|
24 Sept 2023 3:15 AM IST

திசையன்விளையில் கெட்டுப்போன உணவுப்பொருள் வைத்திருந்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திசையன்விளை:

திசையன்விளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி மற்றும் குழுவினர் நேற்று திசையன்விளையில் உள்ள ஓட்டல்கள், துரித உணவு கடைகள், குளிர்பான கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த கெட்டுப்போன 5 கிலோ சிக்கன், 2 கிலோ நூடுல்ஸ், அஜினமோட்டோ ஆகியவற்றை கைப்பற்றி அழித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்து வசூலித்தனர்.

மேலும் செய்திகள்