< Back
மாநில செய்திகள்
கழிவுநீரை மழைநீர் வடிகாலுடன் இணைத்தால் அபராதம் - மாநகராட்சி எச்சரிக்கை
சென்னை
மாநில செய்திகள்

கழிவுநீரை மழைநீர் வடிகாலுடன் இணைத்தால் அபராதம் - மாநகராட்சி எச்சரிக்கை

தினத்தந்தி
|
1 July 2022 8:58 AM IST

சென்னை மாநகராட்சியில் கழிவுநீரை மழைநீர் வடிகாலுடன் இணைத்தால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கட்டிட கழிவுகளை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்திலும் மண்டல பறக்கும் படைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினரால் இதுவரை 15 மண்டலங்களில் 528 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அதேபோல் 406 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன. மேலும் மழைநீர் வடிகால்களில் இணைக்கப்பட்டிருந்த 94 கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. எனவே, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பொது இடங்களில் கட்டிடக் கழிவுகள் கொட்டுவதை தவிர்க்க வேண்டும். மழைநீர் வடிகால்களில் விதிகளை மீறி கழிவுநீர் இணைப்பிணை இணைத்துள்ளவர்கள் அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் மண்டல பறக்கும் படைக்குழுவினரால் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்