< Back
மாநில செய்திகள்
பொக்லைன் எந்திர உரிமையாளருக்கு அபராதம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

பொக்லைன் எந்திர உரிமையாளருக்கு அபராதம்

தினத்தந்தி
|
18 Aug 2023 1:45 AM IST

கொடைக்கானலில் அனுமதியின்றி பொக்லைன் எந்திரத்தை இயக்கியதால் அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் பொக்லைன் எந்திரம் உள்ளிட்ட கனரக வாகனங்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்தநிலையில் கொடைக்கானல் குறிஞ்சிநகர் அய்யப்பன் கோவில் அருகே ஒருவர் தனது நிலத்தில் அனுமதியின்றி பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை அப்புறப்படுத்தினார். அப்போது அருகில் உள்ள குடியிருப்பு பகுதியிலும் மண் அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள வீடுகள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் அனுமதியின்றி இயக்கியதாக பொக்லைன் எந்திர உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து ஆர்.டி.ஓ. ராஜா உத்தரவிட்டார். தொடர்ந்து பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்