< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
புகையிலை விற்ற 9 கடைகளுக்கு அபராதம்
|9 Oct 2023 2:00 AM IST
கிணத்துக்கடவில் புகையிலை விற்ற 9 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கிணத்துக்கடவு மணிகண்டபுரம் பகுதியில் பள்ளி, கோவில் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் பீடி, சிகெரெட், குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சி.சமீதாவுக்கு புகார் வந்தது. இதையடுத்து நேற்று சுகாதார மேற்பார்வையாளர் ராஜவேல், ஆய்வாளர்கள் குணசேகரன், செல்வம், இன்பரசன் ஆகியோர் கொண்ட குழுவினர் அந்த கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பீடி, சிகெரெட், புகையிலை விற்பனை செய்ததாகவும், புகைபிடிக்க அனுமதித்தாகவும் 9 கடைகளுக்கு ரூ.5 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டது.