< Back
மாநில செய்திகள்
எடப்பாடி பழனிசாமி உருவபொம்மை எரித்த வழக்கில் 13 பேருக்கு அபராதம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமி உருவபொம்மை எரித்த வழக்கில் 13 பேருக்கு அபராதம்

தினத்தந்தி
|
16 Dec 2022 9:51 PM IST

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவபொம்மை எரித்த வழக்கில் 13 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் கடந்த 12.9.2017 அன்று முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை எரித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜன், நல்லதம்பி, ராஜேந்திரன், முத்துக்குமார், பாண்டியன், பிச்சைமணி, திலீப்குமார், அன்பு, பாண்டியராதா, மணிகண்டன், ரத்தினம், புஷ்பராஜ், சாலமன் ஆகிய 13 பேர் மீது வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரவணன் விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் சூசை ராபர்ட் ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட 13 பேருக்கு தலா ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்