< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
கல்லூரி மாணவர் உள்பட 2 பேருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
|3 Aug 2022 12:41 AM IST
முயல்வேட்டைக்கு சென்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து வனத் துறையினர் நட வடிக்கை எடுத்தனர்.
முயல் வேட்டை
சேலம் சேர்வராயன் தெற்கு வனச்சரகத்திற்குட்பட்ட குரும்பப்பட்டி காப்புக்காட்டில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 பேர் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தனர். அவர்கள் இருவரையும் வனத்துறையினர் பிடித்து சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் சின்னதம்பியிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த நடராஜ் (வயது 25), மற்றொருவர் கல்லூரி மாணவர் என்பதும், முயல் வேட்டைக்கு சென்றதும் தெரியவந்தது.
ரூ.25 ஆயிரம்அபராதம்
இதையடுத்து காட்டிற்குள் அத்துமீறி நுழைந்து முயல் வேட்டையாட முயன்ற அவர்கள் 2 பேருக்கும் தலா ரூ.12 ஆயிரத்து 500 என மொத்தம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) கவுதம் உத்தரவிட்டார்.