< Back
மாநில செய்திகள்
விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்
நாமக்கல்
மாநில செய்திகள்

விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்

தினத்தந்தி
|
30 Jun 2023 12:15 AM IST

விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் காவிரி ஆற்றுப்பாலம் அருகில் உள்ள சோதனை சாவடி பகுதியில் வேலூர் போலீஸ் நிலையம் மற்றும் நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சிறப்பு வாகன தனிக்கை நடைபெற்றது. நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் உமாமகேஸ்வரி மற்றும் வேலூர் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். சோதனையில் அவ்வழியாக தார்பாய் போடாமல் வந்த மணல் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்த வாகனங்களில் தார்ப்பாய் போட வைத்த பிறகு செல்ல அனுமதிக்கப்பட்டது. மேலும் அவ்வழியே தலைக்கவசம் அணியாமல் இரு சக்கரம் வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. சுற்றுலா வாகனங்கள் மற்றும் கல்வி நிறுவன வாகனங்களும் தணிக்கை செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. அதிக பாரம் ஏற்றி வந்த சரக்கு வாகனங்களுக்கும் ரூ.1 லட்சம் அபராத தொகை வசூலிக்கும் பொருட்டு தணிக்கை அறிக்கை சீட்டு வழங்கப்பட்டது. இந்த சிறப்பு வாகன தனிக்கை தொடர்ந்து நடைபெறும் என நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்