< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
விவசாயி உருவ பொம்மை எரிப்பு
|8 Feb 2023 12:15 AM IST
கூத்தாநல்லூர் அருகே விவசாயி உருவ பொம்மை எரிப்பு
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே உள்ள, சேகரை, மெயின்ரோட்டு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 60).விவசாயி. இவர், சேகரை பகுதியில் விவசாய நிலங்கள் பாதிப்பு குறித்தும், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்தும் அதிகாரிகளுக்கு மனு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, நேற்று முன்தினம் விவசாயி உருவபொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்ற செந்தில்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்குள்ள இடுகாட்டில் வைத்து எரித்துள்ளனர். இது குறித்து பொதக்குடி கிராம நிர்வாக அலுவலர் ராமையா அளித்த புகாரின் பேரில், செந்தில்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்பட 20 பேர் மீது கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.