< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
ஏரியூர் அருகேகிணற்றில் தவறி விழுந்த மயில் உயிருடன் மீட்பு
|22 April 2023 12:30 AM IST
ஏரியூர்:
ஏரியூர் அருகே அஜ்ஜன அள்ளி ஊராட்சி சின்ன வத்தலாபுரம் பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக 60 அடி ஆழ பாழடைந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றில் நேற்று மயில் ஒன்று தவறி விழுந்ததை அப்பகுதியில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் பார்த்தனர். இதையடுத்து அவர்கள் பென்னாகரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறை அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில் முரளி, ராஜூ, சிதம்பரம் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இறங்கி சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மயிலை உயிருடன் மீட்டனர்.