< Back
மாநில செய்திகள்
தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம்
சேலம்
மாநில செய்திகள்

தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம்

தினத்தந்தி
|
7 Aug 2022 7:47 PM GMT

கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சேலத்தில் தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம் நடத்தினர். இதையொட்டி கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சேலத்தில் தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம் நடத்தினர். இதையொட்டி கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அமைதி ஊர்வலம்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று கடைபிடிக்கப்பட்டது. சேலத்தில் தி.மு.க. சார்பில் அமைதி ஊர்வலம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் அக்கட்சியினர் அமைதி ஊர்வலம் சென்றனர்.

கலெக்டர் அலுவலகம் அருகே பெரியார் சிலையில் இருந்து தொடங்கிய அமைதி ஊர்வலம் திருவள்ளுவர் சிலை வழியாக பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள அண்ணாசிலையில் முடிவடைந்தது. அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கருணாநிதியின் சாதனை துளிகள் புத்தகம் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில், மத்திய மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன், மாவட்ட பொருளாளர் சுபாஷ், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மண்டலக்குழு தலைவர்கள் அசோகன், உமாராணி, தனசேகரன், மாவட்ட துணை செயலாளர் ரகுபதி, மாநகர செயலாளர் ஜெயக்குமார், கவுன்சிலர் சாந்தமூர்த்தி, முன்னாள் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சாரதி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உருவ சிலைக்கு அஞ்சலி

இதேபோல் சேலம் 4 ரோட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று கருணாநிதியின் நினைவுநாள் கடைபிடிக்கப்பட்டது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் மார்பளவு உருவ சிலைக்கு எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கருணாநிதியின் பொன்மொழியை நினைவு கூர்ந்து உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து அலுவலகம் வெளியில் உள்ள 40 அடி உயர கருணாநிதியின் படத்திற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.அண்ணாமலை, பனமரத்துப்பட்டி ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் ராஜா, நிர்வாகிகள் தங்கராஜ், கோபால், கலையரசன், லட்சுமண பெருமாள், தினேஷ், ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குமாரசாமிப்பட்டி

குமாரசாமிப்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் அஸ்தம்பட்டி மண்டலக்குழு தலைவர் உமாராணி கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து 2 சாலையோர வியாபாரிகளுக்கு சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பில் 2 தள்ளுவண்டிகளை வழங்கினார். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாநகராட்சி 14-வது வார்டு தி.மு.க. சார்பில் குமாரசாமிப்பட்டியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப்படத்திற்கு மாநகராட்சி பணிக்குழு தலைவர் சாந்தமூர்த்தி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். வட்ட செயலாளர் செந்தில்குமார், முன்னாள் விவசாய அணி துணை செயலாளர் சாரதி சீனிவாசன், குமாரசாமிப்பட்டி பகுதி பிரதிநிதி ரமேஷ்பாபு, பகுதி பொருளாளர் வெங்கடேஷ், சிவக்குமார், விஜயகுமார், பன்னீர்செல்வம், பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உழவர்சந்தை

சூரமங்கலம் உழவர்சந்தையில் கருணாநிதி நினைவுநாளையொட்டி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. விவசாய அலுவலர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். இதில் திரளான விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்