< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
கோவில் திருவிழா நடத்துவது குறித்து சமாதான கூட்டம்
|28 July 2023 11:29 PM IST
தொண்டமானூர் கிராமத்தில் கோவில் திருவிழா நடத்துவது குறித்து சமாதான கூட்டம் உதவி கலெக்டர் தலைமையில் நடந்தது.
தண்டராம்பட்டு
தண்டராம்பட்டு அருகே தொண்டமானூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத 3-வது செவ்வாய்க்கிழமை பொங்கல் வைத்து திருவிழா நடத்துவது வழக்கம்.
இந்த நிலையில் ஒரு பிரிவினர் எங்கள் பகுதிக்கு சாமி வீதி உலா வர வேண்டும் என தாசில்தார் அப்துல் ரகூப்பிடம் மனு அளித்திருந்தனர்.
இதனால் இன்று மாலை தாலுகா அலுவலகத்தில் திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் இதற்கு முன்பு எப்படி திருவிழா நடைபெற்றதோ அதேபோன்று இந்த ஆண்டும் திருவிழா நடத்த இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன், தாசில்தார் அப்துல் ரகூப், மண்டல துணை தாசில்தார் மோகனராமன், வருவாய் ஆய்வாளர் காளீஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் ஜெயமணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.