தஞ்சாவூர்
காத்திருப்பு போராட்டம் வாபஸ்
|காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
அம்மாப்பேட்டை பகுதியில் நிலஅளவையர்களை நியமிக்க வேண்டும். வீட்டு மனைப்பட்டாவை முறைப்படி அளவீடு செய்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுவாசல் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி அறிவித்தது. இதையடுத்து தாசில்தார் பூங்கொடி, கட்சியினரை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தினார். இதில் வருவாய் அதிகாரி சாந்தி, கிராம நிர்வாக அதிகாரி விவேக், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துவேல், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், பொன்.சேகர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் லெட்சுமணன், செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது அம்மாப்பேட்டை மற்றும் சாலியமங்கலம் சரக்கத்துக்கு தனியாக நில அளவை பணிகள் மேற்கொள்ள நில அளவையரை ஒதுக்கீடு செய்யப்படும், நில அளவீடு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் போராட்டத்தை கட்சியினர் வாபஸ் பெற்றனர்.