< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானம் ஊட்டியவர் பாவேந்தர் பாரதிதாசன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
|29 April 2024 11:23 AM IST
பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் தெரிவித்து இருப்பதாவது:-
"தமிழ்எங்கள் உயிரென்ப தாலே - வெல்லுந்
தரமுண்டு தமிழருக் கிப்புவி மேலே"
"பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலியென உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலியெனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!"
எனக் கனல்தெறிக்கும் வரிகளால் திராவிட இனமானமும் தமிழுணர்வும் ஊட்டிய எம் புரட்சிக்கவி பாவேந்தருக்கு அவர்தம் பிறந்தநாளில் வீரவணக்கம்! இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.