தஞ்சாவூர்
பாட்டுவநாச்சி வாய்க்காலை தூர்வார வேண்டும்
|மதுக்கூர் அருகே உள்ள பாட்டுவநாச்சி வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுக்கூர் அருகே உள்ள பாட்டுவநாச்சி வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாட்டுவநாச்சி வாய்க்கால்
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள முசிறி கருப்பேரியில் பாட்டுவநாச்சி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மூலம் முசிறி, மதுக்கூர் வடக்கு, வேப்பங்குளம், படப்பைக்காடு, மூத்தாக்குறிச்சி, வாட்டாக்குடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் 500 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது இந்த பாட்டுவநாச்சி வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமலும், கரைகள் மேம்படுத்தப்படாமலும் புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் வாய்க்காலில் செடி,கொடிகள் வளர்ந்தும், ஆகாயத்தாமரைகள் வளர்ந்தும் காணப்படுகிறது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளதால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.
தூர்வார வேண்டும்
இந்த வாய்க்கால் அகலம் குறைந்தும், தூர்வாரப்படாததாலும் இங்குள்ள தண்ணீர் அடிக்கடி வயலுக்குள் புகுந்து வீணாகிறது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதர்மண்டி கிடக்கும் பாட்டுவநாச்சி வாய்க்காலை தூர்வாரியும், அதன் கரைகளை மேம்படுத்தியும் தர ேவண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.