செங்கல்பட்டு
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க. சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
|வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க. சார்பில் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டு மத்திய மாவட்டம், காட்டாங்கொளத்தூர் கிழக்கு ஒன்றிய பா.ம.க. சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி, தமிழக முதல்-அமைச்சர் மற்றும் பிற்பட்டோர் ஆணையாளருக்கு தபால் அனுப்பும் போராட்டம் கருநிலம் கிராமத்தில் உள்ள துணை தபால் அலுவலகம் எதிரே நடைபெற்றது.
போராட்டத்திற்கு காட்டாங்கொளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை, மாநில செயற்குழு உறுப்பினர் காயரம்பேடு இ.தேவராஜ், ஒன்றிய துணை செயலாளர் உமாபதி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் லிங்கேஷ், கருநிலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜி.சங்கர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில வன்னியர் சங்க செயலாளர் திருக்கச்சூர் கி.ஆறுமுகம் கலந்துகொண்டு தபால் அனுப்பும் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு வலியுறுத்தி கையில் தபாலுடன் ஊர்வலமாக வந்த பா.ம.க., வன்னியர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கருநிலம் கிராமத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் உள்ள தபால் பெட்டியில் கோரிக்கை கடிதங்களை போட்டனர். இதில் நிர்வாகிகள் கண்ணப்பன், வெங்கடேசன், ஜெயராமன் வார்டு உறுப்பினர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.