செங்கல்பட்டு
பா.ம.க. சார்பில் அன்னதானம்
|பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டன.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பஜார் வீதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 1987-ம் ஆண்டு 108 சாதி மக்களுக்காக கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெற்று தர உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு வீரவணக்க கூட்டம் நேற்று நடந்தது.
இதில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வன்னியர் சங்க தலைவர் சத்யா, ஒன்றிய கவுன்சிலர் எம்.ஜெ.அண்ணாமலை, முன்னாள் ஒன்றிய செயலாளர் திவாகர், முன்னிலை வகித்தனர். மறைமலைநகர் நகர தலைவர் தெய்வசிகாமணி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில வன்னியர் சங்க செயலாளருமான திருக்கச்சூர் ஆறுமுகம், மத்திய மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை, முன்னால் சேர்மேன் இளந்தோப்பு வாசு ஆகியோர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கிளை செயலாளர் பழக்கடை கருணா, பசுபதி, கிருஷ்ணகுமார். திருத்தேரி ரா.பழனி, பாரேரி புல்லட் ரமேஷ், பிளம்பர்.சீனு, தன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.