ராமநாதபுரம்
பத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழா
|சாயல்குடி அருகே பத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழா நடந்தது.
சாயல்குடி,
சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் சத்திரிய இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட சக்தி விநாயகர், கன்னி விநாயகர், ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி, சமேத ஸ்ரீனிவாச பெருமாள், உஜ்ஜயினி மாகாளி அம்மன், பத்திரகாளியம்மன், மதுரை வீர சுவாமி கோவில் கொடை விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு சிங்கப்பூர் பொறியாளர் ஆனந்தலிங்கம் தலைமை தாங்கினார்.
கன்னிராஜபுரம் சத்திரிய இந்து நாடார் உறவின்முறை தலைவர் சுந்தர மகாலிங்கம், திருப்பூர் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையாளர் ஈஸ்வரன், வக்கீல் அஜித் டோகோ, பொறியாளர் நாகலிங்கம், கன்னிராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்மனுக்கு திருவிளக்கு பூஜை, திருக்கல்யாணம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜை, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, அம்மனுக்கு அலங்கார பூஜை, படைக்கஞ்சி ஊற்றுதல், கும்மி கோலாட்டம், பெண்கள் மாவிளக்கு எடுத்தல், பால்குடம் எடுத்தல், வாணவேடிக்கையுடன் ரதத்தில் அம்மன் வீதி உலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதை தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து நகர் முழுவதும் சுற்றி வந்து கடலில் சென்று கரைத்தனர். இந்நிகழ்ச்சியில் மதுரை அமுதம் மெட்ரிக் தாளாளர் ஜெய வீரபாண்டியன், சென்னை வாழ் கன்னிராஜபுரம் சுற்றுவட்டார நாடார் சங்க தலைவர் முருகேச பாண்டியன், செயலாளர் செல்வலிங்கம், பொருளாளர் மணிராஜ், சென்னை சுரேஷ், முத்துக்கனி, முன்னாள் கன்னிராஜபுரம் கிராம தலைவர் பலவேசம், தொழிலதிபர்கள் செங்குட்டுவன், அசோகன், கன்னிராஜபுரம் சத்திரிய நாடார் நடுநிலைப்பள்ளி கல்வி குழு தலைவர் பிரம்மநாதன், செயலாளர் தமிழ்ச் செழியன், நிர்வாகஸ்தர்கள் சந்திரசேகர், வேல்சாமி, ராமர், ஆறுமுகம், கணேசன், முத்துச் செழியன், சின்ன கண்ணன், கணக்கர் அசோகன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சத்திரிய இந்து நாடார் உறவின்முறை நிர்வாகிகள் மற்றும் சத்திரிய இந்து நாடார் இளைஞர் அணியினர் செய்தனர்.