< Back
மாநில செய்திகள்
நீண்ட நேரம் காத்திருப்பால் நோயாளிகள் அவதி
விருதுநகர்
மாநில செய்திகள்

நீண்ட நேரம் காத்திருப்பால் நோயாளிகள் அவதி

தினத்தந்தி
|
10 Aug 2023 4:52 AM IST

அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பெயர் பதிவு செய்ய போதிய ஊழியர்கள் இல்லாத தால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.


அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பெயர் பதிவு செய்ய போதிய ஊழியர்கள் இல்லாத தால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

அரசு ஆஸ்பத்திரி

விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு அதி நவீன சிகிச்சை முறைகள் அமலுக்கு வந்த பிறகு தினசரி வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவிற்கு அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வந்து செல்லும் நிலை உள்ளது.

அதிலும் மாவட்டம் முழுவதும் இருந்து நகர்புறங்களிலும், கிராமப்புறங்களில் இருந்து பொதுமக்கள் அதிகாலையிலேயே வெளி நோயாளி சிகிச்சை பிரிவில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய காத்திருக்கும் நிலை உள்ளது. ஆனால் பெயர்களை பதிவு செய்ய போதிய ஊழியர்கள் நியமிக்கப்படாத நிலையில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சிரமம் ஏற்படுகிறது.

கூடுதல் ஊழியர்கள்

இதனால் பலர் சிகிச்சை பெற முடியாமல் திரும்ப வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.

எனவே ஆஸ்பத்திரி நிர்வாகம் இதை தவிர்க்க வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவில் பெயர்களை பதிவு செய்ய கூடுதல் ஊழியர்களையும், அனைவரும் எளிதில் சிகிச்சை பெறும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளையும் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்