திருப்பத்தூர்
நோயாளிகளுக்கு சிறந்தமுறையில் சிகிச்சையளிக்க வேண்டும்
|மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சையளிக்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட இணை இயக்குனர் அறிவுறுத்தினார்.
மருத்துவமனையில் ஆய்வு
நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300- க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாாளிகளாகவும் பலர் சிகிச்சை பெறுகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் சரியாக பணி செய்கிறார்களா என ஆய்வு செய்தார்.
சிறந்த முறையில்
பின்னர் நோயாளிகளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் அனைத்தும் போதுமானதாக இருப்பு உள்ளதா எனவும், தமிழக அரசு வழங்கும் நிதியை சரியாக பயன்படுத்துகின்றனரா எனவும் ஆய்வு செய்த அவர், நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகளிடமும், அறுவை சிகிச்சை செய்து கொண்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிகள் உள்பட அனைவருக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறைகள் மட்டுமின்றி மருத்துவமனை முழுவதும் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் அறிவுறுத்தினார்.
அதன் பிறகு சித்தமருத்துவ பிரிவையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது டாக்டர்கள், சுகாதார செவிலியர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.