< Back
மாநில செய்திகள்
பசுவந்தனை, ஓட்டப்பிடாரம்கோவில்களில் சித்திரை திருவிழா தேரோட்டம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

பசுவந்தனை, ஓட்டப்பிடாரம்கோவில்களில் சித்திரை திருவிழா தேரோட்டம்

தினத்தந்தி
|
3 May 2023 6:45 PM GMT

பசுவந்தனை, ஓட்டப்பிடாரம் கோவில்களில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது.

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம், பசுவந்தனை கோவில்களில் நேற்று சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பசுவந்தனை

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை ஆனந்தவல்லி உடனுறை கைலாசநாதசுவாமி கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கடந்த 25-ந்தேதி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 10.30 மணிக்கு கொடி பட்டம் எடுத்து ரத வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. காலை 11 மணிக்கு கோவில் கொடிமரத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்திற்கு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. இதனை தொடர்ந்து காலை மற்றும் மாலையில் சுவாமி,அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சப்பர வீதிஉலா விழா நடந்தது.

தேரோட்டம்

விழாவின் 9-வது நாளான நேற்று காலை 6மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருளினர். இதைத் தொடர்ந்து தேருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. காலை 10 மணிக்கு கோவில் செயல் அலுவலர் வெள்ளச்சாமி, நாகம்பட்டி பண்ணையார்கள் என்.வி.ஆர்.கே ராமானுஜ கணேஷ், சுதாகர் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேர் முக்கிய வீதி வழியாக சென்ற தேர் காலை 11.30 நிலையை சென்றடைந்தது. இன்று(வியாழக்கிழமை) தீர்த்தவாரி திருவிழாவும், நாளை(வௌ்ளிக்கிழமை) இரவு சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

ஓட்டப்பிடாரம்

ஓட்டப்பிடாரம் அகிலாண்டேஸ்வரி உடனுறை விஸ்வநாதசுவாமி கோவிலில் சித்திைரத் திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சப்பர வீதி உலா நடந்தது. விழாவின் முக்கியநிகழ்ச்சியான நேற்று காலை 6 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை 9 மணிக்கு சுவாமி அம்பாள் தேருக்கு எழுந்தருளினர். இதைத் தொடர்ந்து தேருக்கு தீபாராதனை செய்யப்பட்டு, காலை 10.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில் ஓட்டப்பிடாரத்தை சுற்றியுள்ள 20 கிராமங்களை சேர்ந்த மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மதியம் 12.30 மணிக்கு தேர் நிலையை சென்றடைந்தது. இதில் இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் முப்பிடாதி என்ற திவ்யா உட்பட பலர் கலந்து கொண்டனர். 10-வது நாளான இன்று(வியாழக்கிழமை) தீர்த்தவாரி திருவிழாவும், நாளை(வெள்ளிக்கிழமை) இரவு சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.

மேலும் செய்திகள்