< Back
மாநில செய்திகள்
பாஸ்போர்ட் இணையதள சேவை சீரானது
மாநில செய்திகள்

பாஸ்போர்ட் இணையதள சேவை சீரானது

தினத்தந்தி
|
2 Sept 2024 10:55 AM IST

தொழில்நுட்ப பராமரிப்பு பணிக்காக பாஸ்போர்ட் இணையதள சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

சென்னை,

தொழில்நுட்ப பராமரிப்பு பணிக்காக பாஸ்போர்ட் இணையதள சேவை ஆகஸ்ட் 29-ம் தேதி இரவு 8 மணி முதல் 2-ம் தேதி (இன்று) காலை 6 மணி வரை செயல்படாது என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்த 5 நாட்களில் விண்ணப்ப பரிசீலனை, அப்பாய்ன்மென்ட் உள்ளிட்ட சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததையடுத்து 5 நாட்களாக முடக்கி வைக்கப்பட்ட பாஸ்போர்ட் இணையதள சேவை இன்று சீரானது. காலை 6 மணி முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. நேர்காணலுக்கு திட்டமிடப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த நேர்காணல் குறித்த தகவல் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும் என பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்