< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
மதுரை வழியாக செல்லும் நாகர்கோவில்-கோவை ரெயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு
|22 Oct 2023 3:03 AM IST
மதுரை வழியாக செல்லும் நாகர்கோவில்-கோவை ரெயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
தென்னக ரெயில்வே சார்பில் பயணிகளின் வசதிக்காக பண்டிகை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க தென் மாவட்ட ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோவையில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வ.எண்.22668) வருகிற 24-ந் தேதி வரையும், நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் நள்ளிரவு ரெயிலில் (வ.எண்.22667) வருகிற 25-ந் தேதி வரையிலும் ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.