< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
இரவில் திடீரென அரசு பஸ்சின் விளக்குகள் எரியாததால் பயணிகள் அதிர்ச்சி
|7 Sept 2022 5:04 AM IST
செங்கல்பட்டில் திடீரென அரசு பஸ்சின் முகப்பு விளக்குகள் உள்பட எந்த விளக்குகளும் எரியவில்லை.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டில் அரசு பஸ்சின் முகப்பு விளக்குகள் உள்பட எந்த விளக்குகளும் எரியாததால், பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
செங்கல்பட்டில் இருந்து செய்யூருக்கு புறப்பட்ட அரசு பஸ்சின் முகப்பு விளக்குகள் உள்பட எந்த விளக்குகளும் திடீரென எரியாமல் போனது. இதனால் அப்பேருந்தில் இருந்த பயணிகளும், அப்பஸ்சை இயக்கிய ஓட்டுனரும் அச்சமடைந்தனர்.
தொடர்ந்து பஸ்சைநிறுத்திய ஓட்டுனரும், நடத்துனரும் பயணிகளை மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.