< Back
மாநில செய்திகள்
தொடர் விடுமுறை: முண்டியடித்துக்கொண்டு ரெயிலில் ஏற முயலும் பயணிகள்
மாநில செய்திகள்

தொடர் விடுமுறை: முண்டியடித்துக்கொண்டு ரெயிலில் ஏற முயலும் பயணிகள்

தினத்தந்தி
|
12 Aug 2022 7:28 PM IST

தொடர் விடுமுறையை முன்னிட்டு தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஊருக்கு செல்ல ரெயில் நிலையத்தில் குவிந்தனர்.

சென்னை:

சென்னை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறையுடன் சுதந்திர தின விழா 15–ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இவ்வாறு தொடர் விடுமுறைகள் கிடைப்பதால் சென்னையில் தங்கி படித்து வரும் மாணவர்கள், வேலைபார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு சென்று வருவர்.

இதனால் தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பஸ் மற்றும் ரெயில்கள் மூலமமாக தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏற முயன்றனர்.

மேலும் செய்திகள்