< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பயணிகள் அவதி
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பயணிகள் அவதி

தினத்தந்தி
|
12 Jun 2022 11:37 PM IST

போதிய பஸ் வசதி இல்லாததால் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

கள்ளக்குறிச்சி,

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. மேலும் இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால், கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் குவிந்தனர். ஆனால் மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழாவுக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் மேல்நாரியப்பனூருக்கு இயக்கப்பட்டன. இதனால் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு போதுமான பஸ்கள் இயக்கப்படவில்லை. இதன்காரணமாக கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இது குறித்து பயணிகள் கூறுகையில், புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழாவுக்காக மேல்நாரியப்பனூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் பள்ளிகள் திறப்பை கணக்கில் கொண்டு கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு போதுமான அளவுக்கு பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நாங்கள் பெரும் அவதி அடைந்துள்ளோம் என்றனர்.

மேலும் செய்திகள்