< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
அரசு பஸ் பழுதானதால் பயணிகள் அவதி
|20 Sept 2022 11:40 PM IST
ஏலகிரி மலைக்கு இயக்கப்படும் அரசு பஸ் பழுதானதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலைக்கு திருப்பத்தூர் பகுதியில் இருந்து காலை 9 மணி அளவில் நிலாவூருக்கு வரும் அரசு பஸ் பழுதடைந்ததால் இன்று மதியம் 12 மணிக்கு வந்துள்ளது.
3 மணிக்கு வரவேண்டிய அரசு பஸ்கள் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லும் பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், தொழிலாளர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். இதுபோன்ற பழுதாகும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.
இதனை சரிசெய்ய பலமுறை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழை நீரில் ஒழுகாத, அடிக்கடி பழுதாகாத பஸ்சா ஏலகிரி மலைக்கு இ?க்க வேண்டும் என பயணிகளும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.