< Back
மாநில செய்திகள்
ஸ்ரீவைகுண்டத்தில் ரெயிலில் சிக்கிய பயணிகள் - சிறப்பு ரெயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைப்பு
மாநில செய்திகள்

ஸ்ரீவைகுண்டத்தில் ரெயிலில் சிக்கிய பயணிகள் - சிறப்பு ரெயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைப்பு

தினத்தந்தி
|
20 Dec 2023 12:27 AM IST

வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் இருந்து சிறப்பு ரெயில் சென்னைக்கு புறப்பட்டது.

தூத்துக்குடி,

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. பல்வேறு பகுதிகளில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் ரெயில் பாதைகளில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே கடந்த 17-ந்தேதி இரவு 8.25 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு 'செந்தூர் எக்ஸ்பிரஸ்' ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் கனமழை காரணமாக தண்டவாளம் தெரியாததால் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரெயில் நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்திருந்ததால் பயணிகள் ரெயிலை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

ரெயிலில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் ஈடுபட்டு வந்தனர். மீட்கப்பட்ட பயணிகள் அனைவரும் பேருந்துகள் மூலம் வாஞ்சி மணியாச்சி சந்திப்புக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு ரெயில் மூலம் 957 பயணிகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


மேலும் செய்திகள்