< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
சேதமடைந்த நிழற்குடையால் பயணிகள் அச்சம்
|25 July 2023 12:29 AM IST
சேதமடைந்த நிழற்குடையால் பயணிகள் அச்சம் அடைகின்றனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த விளாமரத்துபட்டி பஸ்நிறுத்தம் வெம்பக்கோட்டையில் இருந்து கோட்டைப்பட்டி வழியாக சாத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இங்குள்ள பயணிகள் நிழற்குடையின் மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள், பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த அச்சப்படுகின்றனர். பயணிகள் நிழற்குடை இருந்தும் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சேதமடைந்த விளாமரத்துப்பட்டி பயணிகள் நிழற்குடையை அப்புறப்படுத்திவிட்டு புதிய நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.