< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
கண்டிகை அருகே புதர் மண்டி கிடக்கும் பயணிகள் நிழற்குடை; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
|28 Oct 2022 3:11 PM IST
கண்டிகை அருகே புதர் மண்டி கிடக்கும் பயணிகள் நிழற்குடை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கண்டிகை அருகே உள்ள குமிழி ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. மழை மற்றும் வெயில் காலங்களில் நிழற்குடையில் ஒதுங்கி நிற்பதற்கு பயணிகள் அச்சப்படுகின்றனர். ஏனென்றால் பயணிகள் நிழற்குடை பராமரிப்பு இல்லாமல் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. தற்போது விஷ பூச்சிகளின் புகலிடமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பயணிகள் நிழற்குடை சுவர்களில் அரசியல் கட்சியினர் சுவரொட்டிகளை ஒட்டி வைத்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-
பராமரிப்பு இல்லாமல் உள்ள பயணிகள் நிழற்குடையை ஊராட்சி நிர்வாகம் சீரமைத்து பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.