< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
குன்றத்தூர் அருகே பஸ் நிறுத்த நிழற்குடை பின்புறம் தேங்கி கிடக்கும் குப்பைகளால் பயணிகள் அவதி
|5 April 2023 3:00 PM IST
குன்றத்தூர் அருகே பஸ் நிறுத்த நிழற்குடை பின்புறம் தேங்கி கிடக்கும் குப்பைகளால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
குன்றத்தூர் அடுத்த ஆண்டாங்குப்பம் பகுதியில் பஸ் நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள ஏராளமான குடியிருப்பு வாசிகள் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளதால் இங்கு பயணிகளின் வசதிக்காக நிழற்குடை அமைக்கப்பட்டது. தற்போது இந்த நிழற்குடை பராமரிப்பு இல்லாமல் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.
நிழற்குடைக்கு பின்புறம் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மது குடிப்பவர்கள் படுத்து தூங்கும் இடமாக நிழற்குடை மாறியுள்ளது. நிழற்குடையை நகராட்சி நிர்வாகம் சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.