< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆடி-கிருத்திகை: அரக்கோணம்-திருத்தணி இடையே பயணிகள் சிறப்பு ரெயில் நாளை முதல் இயக்கம்
|20 July 2022 11:03 AM IST
ஆடி-கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம்-திருத்தணி இடையே பயணிகள் சிறப்பு ரெயில் நாளை முதல் 25-ந்தேதி வரை இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை:
ஆடி-கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம்-திருத்தணி இடையே பயணிகள் சிறப்பு ரெயில் நாளை முதல் 25-ந்தேதி வரை இயக்கப்படுகிறது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஆடி-கிருத்திகை பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 25-ந்தேதி வரை(5 நாட்களுக்கு), அரக்கோணம்-திருத்தணி இடையே கீழ்கண்ட பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கம்.
- பயணிகள் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 43407/43418) அரக்கோணத்தில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு காலை 10.40 மணிக்கு திருத்தணி வந்தடையும். மீண்டும் இந்த ரெயில் திருத்தணியில் இருந்து காலை 10.50 மணிக்கு புறப்பட்டு, காலை 11.08 மணிக்கு அரக்கோணம் வந்தடையும்.
- பயணிகள் சிறப்பு ரெயில்(43413/43422) அரக்கோணத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.20 மணிக்கு திருத்தணி வந்தடையும். மீண்டும் இந்த ரெயில் திருத்தணியில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1.48 மணிக்கு அரக்கோணம் வந்தடையும்.
- பயணிகள் சிறப்பு ரெயில்(43415/43426) அரக்கோணத்தில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 3.10 மணிக்கு திருத்தணி வந்தடையும். மீண்டும் இந்த ரெயில் திருத்தணியில் இருந்து மதியம் 3.20 மணிக்கு புறப்பட்டு, மதியம் 3.38 மணிக்கு அரக்கோணம் வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.