இந்தியா - இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை: அமைச்சர் எ.வ.வேலு
|இந்தியா - இலங்கை இடையே குறைந்த தூர பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்தியா - இலங்கை இடையில் குறைந்த தூர பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து பேசிய பிறகு அமைச்சர் எ.வ.வேலு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது,
இந்தியா - இலங்கை இடையில் குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க, ராமேசுவரம் - தலைமன்னார், ராமேசுவரம் - காங்கேசந்துறை ஆகிய வழித்தடங்களில் தொடங்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என்றார்.
மேலும், அனைத்து காலநிலைகளிலும் தங்கு தடையற்ற போக்குவரத்து" என்ற திட்டத்தின் கீழ் 29 மாவட்டங்களில் 200 தரைப்பாலங்கள் ரூ.300 கோடியில் உயர்மட்ட பாலங்களாக கட்டப்படும். கடன் உதவி பெற்று 20 மாவட்டங்களில் 73 தரைப்பாலங்கள் ரூ.487 கோடியில் உயர்மட்ட பாலங்களாக கட்டப்படும் என்றார்.
மேலும், பல்வேறு புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.