< Back
மாநில செய்திகள்
சுற்றுச்சுவர் அமைக்க இடையூறாக உள்ள கட்சி கொடிக்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

சுற்றுச்சுவர் அமைக்க இடையூறாக உள்ள கட்சி கொடிக்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
7 Dec 2022 3:14 PM IST

காவனூர் ஊராட்சி மன்ற அலுலக கட்டிடத்திற்கான சுற்றுச்சுவர் அமைக்க இடையூறாக உள்ள கட்சி கொடிக்கம்பங்கள், டிரான்ஸ்பார்மரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள காவனூர் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கட்டிடத்தின் முன்பக்க சுற்றுச்சுவர் அமைக்கும் பகுதியில் கட்சி கொடி கம்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் அகற்றப்படாமல் இடையூறாக உள்ளன.

இதனால் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடமுன்பக்க சுற்றுச்சுவர் கட்டப்படாமலும் கேட் அமைக்கப்படாமலும் உள்ளது. ஊராட்சி மன்ற புதிய கட்டிடம் பணி முடிந்தும் சுற்றுச்சுவர் பணி முடிவடையாததால் ஊராட்சி மன்ற கட்டிடம் பொது மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

எனவே ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட முன்பக்கம் உள்ள கட்சி கொடி கம்பம் கல்வெட்டுகளை அகற்றி உடனடியாக சுற்றுச்சுவர் அமைத்தும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் உரசி பேராபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள உயர் மின்னழுத்த ட்ரான்ஸ்பார்மரை அகற்றி வேறு இடத்தில் வைக்க மறைமலைநகர் மின்வாரிய துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதையும் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்