< Back
மாநில செய்திகள்
தமிழ்நாடு கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்து: காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பு
மாநில செய்திகள்

தமிழ்நாடு கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்து: காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பு

தினத்தந்தி
|
24 Jan 2024 10:58 AM IST

குடியரசு தினத்தையொட்டி கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற உள்ளது.

சென்னை,

நாட்டின் குடியரசு தினம் வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழாவையொட்டி தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி கவர்னர் மாளிகையில் அனைத்து கட்சிகளுக்கும் தேநீர் விருந்து வைக்க உள்ளார்.

கவர்னர் ஆர்.என். ரவி அளிக்கும் இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு கவர்னர் மாளிகை அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், குடியரசு தின விழாவையொட்டி கவர்னர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.

அதன்படி, தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.

கவர்னர் ஆர்.என். ரவி தமிழ்நாடு கலாசாரம், பண்பாடு, கலை, இலக்கியங்களுக்கு எதிராக பேசுகிறார். வரலாற்றை சிதைக்கும் வகையில் பேசி வருகிறார். ஆகையால், கவர்னர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்துள்ளன.

மேலும் செய்திகள்