< Back
மாநில செய்திகள்
கஸ்பாபேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சந்தித்து கோரிக்கைகளை கேட்ட அமைச்சர்
ஈரோடு
மாநில செய்திகள்

கஸ்பாபேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சந்தித்து கோரிக்கைகளை கேட்ட அமைச்சர்

தினத்தந்தி
|
28 July 2023 3:59 AM IST

கஸ்பாபேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சந்தித்து அமைச்சர் கோரிக்கைகளை கேட்டாா்.

சோலார்

உழவர்களின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும், நெல் குவிண்டாலுக்கு தமிழ்நாடு அரசு ரூ.3 ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம், மரவள்ளி கிழங்கு டன்னுக்கு ரூ.12 ஆயிரம், மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரம் மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கஸ்பாபேட்டையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கடந்த 13-ந் தேதியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கஸ்பாபேட்டை பகுதிக்கு சென்ற அமைச்சர் சு.முத்துசாமி, அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை சந்தித்தார். அப்போது அவரிடம் விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளை விளக்கி கூறினர். பின்னர் சிறிது நேரத்தில் அமைச்சர் சு.முத்துசாமி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Related Tags :
மேலும் செய்திகள்