தாம்பரம்-நாகர்கோவில் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதியாக ரத்து
|மதுரை கோட்டத்தில் இருவழிப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற இருப்பதால் தாம்பரம்-நாகர்கோவில் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை-மேலப்பாளையம் இடையே இருவழிப்பாதை அமைக்கும் பணிகள் காரணமாக, திருச்செந்தூரில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு வாஞ்சி மணியாச்சி செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் 11-ந் தேதி மட்டும் திருச்செந்தூர்-நெல்லை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில் திருச்செந்தூரில் இருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16732) பகுதி நேரமாக திருச்செந்தூர்-நெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறது. பாலக்காட்டில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் பகுதி நேரமாக நெல்லை-திருச்செந்தூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
திருச்செந்தூரில் இருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16732) வருகிற 12-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை பகுதி நேரமாக திருச்செந்தூர்-வாஞ்சி மணியாச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே தேதிகளில் பாலகாட்டில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16731) பகுதி நேரமாக வாஞ்சி மணியாச்சி-திருச்செந்தூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
செங்கோட்டையில் இருந்து மதியம் 2.35 மணிக்கு புறப்பட்டு, நெல்லை செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் 11-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பகுதி நேரமாக சேரன்மகாதேவி-நெல்லை இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே தேதிகளில் நெல்லையில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, செங்கோட்டை செல்லும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் பகுதி நேரமாக நெல்லை-சேரன்மகாதேவி இடையே ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (20691) 14-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை பகுதி நேரமாக விருதுநகர்-நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து மதியம் 3.50 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (20692) 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை பகுதி நேரமாக நாகர்கோவில்-விருதுநகர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
பாலகாட்டில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் 14-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை கொல்லம்-நெல்லை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.
நெல்லையில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் 15-ந் தேதியில் இருந்து 20-ந் தேதி வரை பகுதி நேரமாக நெல்லை-கொல்லம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.