< Back
மாநில செய்திகள்
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து

கோப்புப்படம்

மாநில செய்திகள்

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து

தினத்தந்தி
|
1 March 2024 10:50 PM IST

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட உள்ளன.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிங்கபெருமாள் கோவில்-செங்கல்பட்டு ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே, சென்னை கடற்கரையில் இருந்து நாளை (சனிக்கிழமை) காலை 11.40 மற்றும் 12.20 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் பகுதி நேரமாக சிங்கபெருமாள் கோவில்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது.

அதே போல, செங்கல்பட்டில் இருந்து மதியம் 1 மணி மற்றும் 1.45 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் பகுதி நேரமாக செங்கல்பட்டு- சிங்கபெருமாள் கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்