< Back
மாநில செய்திகள்
நாடாளுமன்ற தேர்தல்; தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள் - டி.டி.வி.தினகரன்
மாநில செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்; தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள் - டி.டி.வி.தினகரன்

தினத்தந்தி
|
22 March 2024 8:48 PM IST

தமிழகத்தில் நடைபெற்றுவரும் மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இந்த நாடாளுமன்ற தேர்தல் களம் அமையட்டும்.

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி ஒருங்கிணைந்து செயல்பட்டு அவர்களின் வெற்றியை உறுதி செய்திட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து நிலையிலான நிர்வாகிகளையும் உடன்பிறப்புகளையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி அவர்களை மூன்றாவது முறையாக அரியணையில் ஏற்றுவதோடு, தமிழகத்தில் நடைபெற்றுவரும் மக்கள் விரோத ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இந்த நாடாளுமன்ற தேர்தல் களம் அமையட்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்