புதுக்கோட்டை
''நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வரலாம்''-திருநாவுக்கரசர் எம்.பி. கருத்து
|நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வரலாம் என திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.
புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அதானி குழுமம் பற்றி ராகுல் காந்தி கேள்வி கேட்டது அதிர்வலையை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி பதவியை பறித்தது பழிவாங்கும் நோக்கத்தோடு மத்திய அரசு செய்துள்ளது. இதனை சட்டரீதியாக எதிர்கொள்ள மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மற்றொருபுறம் அரசியல் ரீதியாக போராட்டம் கிராமங்கள் முதல் டெல்லி வரை ஒரு மாதத்தில் நடத்தப்படும். சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தி கொண்டே செல்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். கலாசேத்ரா கல்லூரி பிரச்சினை தொடர்பாக நீதிபதி கொண்ட குழுவினர் விசாரணை நடத்த வேண்டும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் வேலை செய்து வருகின்றனர். இந்த தேர்தல் முன்கூட்டியே வரும் என சொல்லப்படுகிறது. கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். அதன்பின் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் வர உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் இனி காங்கிரஸ் காலமாக இருக்கும். அங்கு தோல்விக்கு பின்னால் நாடாளுமன்ற தேர்தலை வைத்தால் நன்றாக இருக்காது என்பதால் 3 அல்லது 5 மாதங்களுக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்த பா.ஜனதா திட்டமிடுவதாக தகவல்கள் வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.