< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'அடுத்த ஆண்டே நாடாளுமன்ற தேர்தல் மீண்டும் வரலாம்' - செல்வப்பெருந்தகை
|9 Sept 2024 4:55 AM IST
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டே மீண்டும் வரலாம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்,
2025-ல் நாடாளுமன்ற தேர்தல் மீண்டும் வரலாம் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"அடுத்த ஆண்டே மத்தியில் தேர்தல் வந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. மத்திய பா.ஜ.க. ஆட்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. தற்போதைய ஆட்சி என்பது நீண்ட ஆயுள் கொண்ட ஆட்சியாக எங்களுக்கு தெரியவில்லை. எனவே 2025-ல் நாடாளுமன்ற தேர்தல் மீண்டும் வரலாம், அல்லது 2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலுடன் சேர்ந்தும் வரலாம்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.