< Back
மாநில செய்திகள்
பாராளுமன்ற தேர்தல்: மதவாத ஆட்சியை ஒழித்திட சபதம் ஏற்போம் - கி.வீரமணி அறிக்கை
மாநில செய்திகள்

பாராளுமன்ற தேர்தல்: 'மதவாத ஆட்சியை ஒழித்திட சபதம் ஏற்போம்' - கி.வீரமணி அறிக்கை

தினத்தந்தி
|
1 Jan 2023 10:42 PM IST

மதவாத ஆட்சியை ஒழித்திட சபதம் ஏற்போம் என கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவை 9 ஆண்டுகளாக மதவாத சக்தி ஆட்சி செய்து வருகிறது. மதவாத ஆட்சியை வீழ்த்த மக்கள் தயாராகி விட்டனர். எதிர்க்கட்சிகளும் தயாராகி விட்டன.

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வித்தைகள் - வியூகங்கள் மூலம் மீண்டும் அரியணை ஏற பா.ஜ.க. முயன்று வருகிறது.

மக்கள் மாற்றத்திற்கு தயாராகிவிட்டனர். சர்வாதிகாரத்தை, சரித்திரம் நீண்ட நாள் வாழ விட்டதில்லை என்பதை எவரும் மறுக்க முடியுமா?. சுயமரியாதை உணர்வுடன் களத்தில் நின்றால், வெற்றி நமதே. அயர்வின்றி, கடமையாற்ற, களம் நம்மை அழைக்கிறது. ஆயத்தமாவோம்.

அண்ணா நினைவு நாளான பிப்ரவரி 3-ந் தேதி - நமது பாதை என்றும் ஈரோட்டு பாதையே என்பதால், தொடர் பிரச்சாரத்தை அங்கே தொடங்கி, மார்ச் முதல் வாரம் வரை தமிழ்நாடு முழுவதும் திராவிட மாடல் ஆட்சியின் காவலனாக கவசமேந்தி புறப்படுவோம். மதவாத ஆட்சியை ஒழித்திட சபதம் ஏற்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்