< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நாடாளுமன்ற தேர்தல்: உத்தேச வேட்பாளர் பட்டியலை அனுப்ப அண்ணாமலைக்கு பாஜக தலைமை உத்தரவு
|21 Jan 2024 1:28 PM IST
நாடாளுமன்ற பணிகளை துவங்க அண்ணாமலைக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் அதை எதிர்கொள்வதற்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளன. தேர்தலை கவனிப்பதற்காக தனியாக நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள். கட்சியின் கூட்டணிகள் குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ள 3 பேர் கொண்ட உத்தேச வேட்பாளர் பட்டியலை தயார் செய்து இந்த மாத இறுதிக்குள் அனுப்புமாறு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நாடாளுமன்ற பணிகளை துவங்க அண்ணாமலைக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் பணிகளை பாஜக தொடங்கியுள்ளது.