நாடாளுமன்ற தேர்தல் 'கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு'-திண்டுக்கல் சீனிவாசன்
|திண்டுக்கல் தொகுதியை பொறுத்தவரை, கூட்டணி கட்சி வேட்பாளர் முகமது முபாரக் அமோக வெற்றி பெறுவார் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்கும் முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நத்தம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் முடிவு குறித்து தற்போது வெளிவரும் கருத்துக்கணிப்புகள் அனைத்தும் கருத்து கணிப்புகள் அல்ல கருத்து திணிப்புகள் தான். திண்டுக்கல் தொகுதியை பொறுத்தவரை, கூட்டணி கட்சி வேட்பாளர் முகமது முபாரக் அமோக வெற்றி பெறுவார். தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்" என்றார்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் கூட்டணி கட்சி வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார். கட்சி தொண்டர்கள், முகவர்கள் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கண்ணும் கருத்துமாக இருந்து பணியாற்ற வேண்டும். ஒரு வாக்கு கூட தவறுதலாக மாற்றுக்கட்சி வேட்பாளருக்கு சென்றுவிடக்கூடாது" என்றார்.