< Back
மாநில செய்திகள்
நாடாளுமன்ற தேர்தல்; மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு
மாநில செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்; மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு

தினத்தந்தி
|
13 Feb 2024 7:55 PM IST

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி உள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.

புதுடெல்லி,

இந்தியாவில் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தமிழ்நாட்டில் தேர்தல் களம் பரபரப்பான சூழலை அடைந்துள்ளது. பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது .

மேலும் செய்திகள்