நாடாளுமன்ற தேர்தலில்: தி.மு.க.வை வீழ்த்தும் கூட்டணியில் அ.ம.மு.க. இருக்கும்
|நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தும் கூட்டணியில் அ.ம.மு.க. இருக்கும் -டி.டி.வி.தினகரன் பேட்டி.
மயிலாடுதுறை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று தருமபுர ஆதீனத்திற்கு வந்து ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சாமிகளை குடும்பத்தினருடன் சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. செயல்படாத நிலையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி செய்த தவறால் சின்னமும் இல்லாமல், கட்சியும் இல்லாமல் தற்போது நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்.
டிசம்பர் மாத கடைசியில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். மத்தியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லுகிற வகையில் கூட்டணி அமைக்கப்படும்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தும் கூட்டணியில் அ.ம.மு.க. இருக்கும்.
அ.தி.மு.க. ஆட்சியில் பல துறைகளில் முறைகேடு நடைபெற்றதால்தான் தி.மு.க.விற்கு மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். எந்த ஊழலாக இருந்தாலும் கத்திரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்துதான் தீர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.