நாடாளுமன்றத் தேர்தல்: விளவங்கோடு தொகுதி மக்களுக்கு 2 ஓட்டு
|நாடாளுமன்றத் தேர்தலோடு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விளவங்கோடு,
விளவங்கோடு சட்டசபை தொகுதியில் மட்டும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலும், சட்டசபை இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 278 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 19 ஆயிரத்து 141 பெண் வாக்காளர்கள், 4 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 423 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த தொகுதியில் மட்டும் 272 வாக்குச்சாவடிகள் உள்ளன. எனவே இந்த வாக்குச்சாவடிகளில் மட்டும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தனியாகவும், சட்டசபை இடைத்தேர்தலுக்கு தனியாகவும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளன.
இதனால் இந்த தொகுதியைச் சேர்ந்த 2 லட்சத்து 36 ஆயிரத்து 423 வாக்காளர்கள் மட்டும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒரு ஓட்டும், சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு ஒரு ஓட்டும் என தலா இரண்டு ஓட்டுகளை பதிவு செய்ய இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.